செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ரயில்வே தண்டாளத்தை கடந்து சென்றபோது ரயில் மோதி வடமாநில வாலிபர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் அருகே சென்னை நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடப்பதாத செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வழியாக கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயில் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது,
பழைய தாலுகா அலுவலகம் செல்லும் இடத்திற்கு அருகே 17வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் தண்டவாளத்தில் மின்சார ரயில் வருவதை கவனிக்காமல் கடந்து சென்றபோது செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் மோதி அந்த வாலிபர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இந்த வாலிபர் வடமாநிலத்தில் எந்த பகுதியை சேர்ந்தவர். அவர் செங்கல்பட்டிற்கு எதற்காக வந்துள்ளார். இங்கு தங்கி வேலை செய்து வருகிறாரா அல்லது இங்குள்ள கல்லூரியில் பயின்று வருகிறாரா. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் வருவதை கவனிக்காமல் கவனக்குறைவால் ரயில் மோதி இறந்தாரா என கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரயில் மோதி வடமாநில வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.