×

குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை கன்னியாகுமரிக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். அதைப்போன்று மறுமார்க்கமாக கன்னியாகுமரி- தாம்பரம் இடையே அதிவேக சிறப்பு ரயில் 26ம் தேதி இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.அதேபோன்று சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இன்று இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் இடையே 26ம் தேதி இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மறுநாள் மதியம் 2 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Republic Day ,Chennai ,Chennai Egmore ,Kanyakumari ,Tambaram ,Dinakaran ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...