- பிஜபி-ஏஐஏடிஎம்கே கூட்டணி
- எடப்பாடி
- நைனார் நாகேந்திரன்
- நெல்லை
- பாஜக
- Palaniswami
- நெல்லை பாஜக வடக்கு மாவட்ட அலுவலகம்
- சுபாஷ்…
நெல்லை: வருமானவரி சோதனை நடத்திதான் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற அவசியம் பாஜவுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லை பாஜ வடக்கு மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் 128வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியார் குறித்து பல்வேறு கருத்துக்களை சீமான் தெரிவித்து வருகிறார். பெரியார் தொடர்பான புத்தகத்தை நான் படித்தது கிடையாது. படித்து பார்த்தால் தான் அவர் குறித்து பேச முடியும். திருவள்ளுவர் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான காலத்தை சேர்ந்தவர். அவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. உலகத் தமிழர்கள் அனைவருக்கும் அவர் பொதுவானவர். பாஜ எதிரி கட்சி இல்லை. எதிர்க்கட்சிதான். அரசின் நல்ல திட்டங்களை ஆதரிப்போம்.
`டங்ஸ்டன்’ சுரங்க திட்டம் குறித்து ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் பாஜ தலைவர் அண்ணாமாலை பேசியுள்ளார். இத்திட்டம் குறித்து நானும் சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். இதுகுறித்து நல்ல செய்தி விரைவில் வரும். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என்ற அவசியம் பாஜவுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் பாஜ நேரில் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னை, தொகுதிக்கு தேவையான வசதிகள் குறித்து பேசியதால் எனது தொகுதிக்கு சாலை வசதி, கல்லூரி, தீயணைப்பு நிலையம் ஆகியவை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ஐ.டி, ஈடி சோதனை நடத்த தேவையில்லை எடப்பாடியிடம் நேரடியாக பேசினாலே பாஜ-அதிமுக கூட்டணி அமைந்துவிடும்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.