- தம்பரம் போக்குவரத்து காவல்துறை
- தாம்பரம்
- தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார்
- தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
- மெட்ராஸ் சேவா
- மேற்கு தாம்பரம்
- தின மலர்
தாம்பரம்: தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, தாம்பரம் போக்குவரத்து காவல் சார்பில் மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள மெட்ராஸ் சேவா சதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் போக்குவரத்து விதிகள் பற்றியும், விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், விபத்துகளை தடுப்பதற்கு அதிவேகமாக செல்லக்கூடாது, தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகப்படுத்தக்கூடாது,
மிதமான வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும், பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லக்கூடாது,காரில் செல்லும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணியவேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, பேருந்து ஓடும்போது ஏறவோ, இறங்கவோ கூடாது, சாலையில் சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டும், சாலையில் வாகன சாகசங்களில் ஈடுபடக்கூடாது, சாலை விதிகளை பின்பற்றி விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பால்வேறு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் சாலை விதிமுறைகளை மதிப்போம்,
விபத்துகளை தவிர்ப்போம் என பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் இருந்தனர்.
The post தாம்பரம் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.