×

பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் 12.81 கோடி பேர் சொந்த ஊர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ேபாக்குவரத்து கழகங்களின் சார்பில் 1,87,617 இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 12.81 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,87,617 பேருந்துகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை இயக்கப்பட்டது. மேலும், இந்தாண்டு 37,832 பேருந்து சேவைகள் கடந்த ஆண்டை விட கூடுதலாக பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டது. பொங்கல் பேருந்து இயக்கத்தின் வழியாக அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களும் சுமார் ரூ.237.47 கோடி அளவில் இயக்க வருவாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.44.69 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் 12.81 கோடி பேர் சொந்த ஊர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Minister Sivasankar ,Chennai ,EBA ,Pongal festival ,Minister ,Sivasankar ,Pongal Thiruday ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...