×

நகை பட்டறை ஊழியர்களை தாக்கி செல்போன் பறித்த 2 ரவுடிகள் கைது

பெரம்பூர்: தாம்பரம் வினோபா நகரை சேர்ந்தவர் அழகு சுந்தரம் (40). பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் அருகே உள்ள நகை பட்டறையில் ஆசாரியாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு உணவு வாங்குவதற்காக பெரம்பூர் மார்க்கெட் வழியாக சென்றபோது, இவரை வழிமறித்த 2 பேர், தகராறு செய்துள்ளனர். அப்போது அவருடன் பணிபுரியும் நகை ஆசாரியான பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் இதை தடுத்துள்ளார்.

அப்போது சுரேஷ் மற்றும் அழகு சுந்தரத்தை மர்ம நபர்கள் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி, அழகு சுந்தரத்தின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அழகு சுந்தரத்திற்கு தலையில் 3 தையல்களும், சுரேஷிற்கு தலையில் 6 தையல்களும் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக செம்பியம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று காலை பெரவள்ளூர் அகரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (எ) யோகேஷ் (21), அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (எ) யோகி பாபு (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே4 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து யோகேஷ் மற்றும் யோகி பாபு ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post நகை பட்டறை ஊழியர்களை தாக்கி செல்போன் பறித்த 2 ரவுடிகள் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Azhugudh Sundaram ,Vinoba Nagar, Tambaram ,Venus Market, Perambur ,Perambur Market ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...