புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “மோதானி அரசாங்கம் கடந்த பத்தாண்டுகளில் தன் பணக்கார நண்பர்களை மட்டுமே கவனித்து வருகிறது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கி உள்ளன. பால், மாவு, பருப்பு, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை தொடுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாட செலவுகளும், மாதாந்திர தவணையும் அதிகரித்து வருகிறது. மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர, ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பட்ஜெட் தற்போது தேவை. மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து பாஜ அரசு நடவடிக்கை எடுக்குமா?” என குற்றச்சாட்டுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பட்ஜெட்டில் நிவாரணம் வழங்க வேண்டும்: காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.