புழல்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புழல் பாலாஜி நகரில் உள்ள மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சங்க வட்ட தலைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டிய கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தோம்.
இக்கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும், கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் டி பிரிவில் சேர்க்க வேண்டும், கிராம உதவியாளர்கள் மரணம் அடைந்து விட்டால் அவர்களின் வாரிசுக்கு பணி வழங்க வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த கிராம உதவியாளர்கள் சிபிஎஸ்என் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், சுந்தரம், ரஞ்சித்குமார், கிரேன்குமார், ரகுபதி, சுவாதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.