- வெங்கூர் ஊராட்சி
- அங்கன்வாடி
- Thiruverumpur
- திருச்சி
- பஞ்சாயத்து யூனியன்
- வேங்கூர்
- பஞ்சாயத்து
- அங்கன்வாடி மையம்
- தின மலர்
திருவெறும்பூர், ஜன.23: திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். திருச்சி அடுத்த திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் வேங்கூர் ஊராட்சியில் உங்கள் ஊரில் உங்களைத் தேடி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கலந்து கொண்டு வேங்கர் ஊராட்சி வி.எஸ் நகரில் உள்ள அங்கன்வாடி மையம், வேங்கூர் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்ததோடு, அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அப்பொழுது அந்த குழந்தைகளின் செயல்பாடுகளும், பதில்களும் கலெக்டருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
பின்னர் அந்த குழந்தைகளுக்கு பென்சில் பரிசுகளை வழங்கினார். மேலும் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து அங்கு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு வேங்கூரில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தையும், தொடக்க கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தையும், நியாய விலை கடையையும் கால்நடை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு தேவையான மருந்து மற்றும் ஊசிகள் இருப்பு குறிக்கும் கேட்டிருந்தார்.
கலெக்டருடன் திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசம், திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள், கூத்தைப்பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு துறை சார்ந்த அதிகாரிகளை சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய நியமித்துள்ளார். இந்த நிலையில் வேங்கூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களுடன் ஆர்டிஓ அருங் கலைந்துரையாடியதுடன் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அதன் பிறகு திருவெறும்பூர் ஊராட்சியில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் கூத்தைப்பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி ஆகிய பகுதிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் செய்த ஆய்வின் அறிக்கையை பெற்று ஆலோசனை வழங்கினார். உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் கலெக்டர் நேற்று காலை முதல் இன்று காலை 9 மணி வரை திருவெறும்பூர் பகுதியில் தங்கி ஆய்வு செய்கிறார்.
The post உங்கள் ஊரில் உங்களை தேடி முகாம்; வேங்கூர் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு: அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுடன் கலந்துரையாடல் appeared first on Dinakaran.