×

திருக்களம்பூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம்

பொன்னமராவதி, ஜன.23: திருக்களம்பூரில் காங்கிரஸ் கிராம கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம கமிட்டி தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் காங்கிரஸ் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். வட்டாரத்தலைவர் கிரிதரன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் சுப்புராம், நாட்டுக்கல் ராஜேந்திரன்,சரவணபவன் மணி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் கிராம கமிட்டி தலைவராக ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் வைத்தியநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருக்களம்பூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress Booth Committee ,Thirukkalampur ,Ponnamaravathi ,Congress Village Committee ,Village Committee ,President ,Congress Committee ,Ponnamaravathi, Pudukkottai district.… ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி வட்டார விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு