இலுப்பூர், ஜன.23: அன்னவாசல் அருகே விவசாய கிணற்றின் மோட்டார் அறையில் இருந்த விஷ பாம்பினை இலுப்பூர் தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். அன்னவாசல் அடுத்த பரம்பூர் அருகே உள்ள வீரப்பெருமாள்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா, விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மோட்டார் அறையில் விஷபாம்பு ஒன்று புகுந்து கொண்டு அச்சுறுத்துவதாக இலுப்பூர் தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு தகவல் அளித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலா தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விஷ பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுவிட்டனர். விவசாய மோட்டார் அறையில் பாம்பு இருந்தது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post இலுப்பூர் அருகே பம்புசெட்டில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் appeared first on Dinakaran.
