- கிராம
- சபா
- நாகப்பட்டினம் மாவட்டம்
- நாகப்பட்டினம்
- கலெக்டர்
- ஆகாஷ்
- குடியரசு தின கிராம சபை
- நாகப்பட்டினம் மாவட்டம்…
- கிராமம்
- தின மலர்
நாகப்பட்டினம்,ஜன.23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் வரும் 26ம் தேதி அன்று நடைபெறும் குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த கிராம ஊராட்சிகளில் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,
மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளர் உறுதிமொழி ஏற்பு மற்றும் இதர பொருட்கள் தொடர்பான கிராம சபை கூட்டம் நடைபெறும். கிராம சபை கூட்டத்தில் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் 193 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.