சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் 2025ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தையொட்டி தகுந்த பாதுகாப்பினை உறுதி செய்யவும், முன்னேற்பாடுகளுடன் கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்திடவும் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகளாக காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் சென்னை பெருநகரில் அனைத்து காவல் மாவட்டங்களிலும் உரிய வாகன தணிக்கை, விடுதிகளில் தங்குபவர்கள், சந்தேக நபர்கள் தணிக்கை, ரோந்து வாகனங்கள் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், சந்தேக வாகனங்கள், உயர் பாதுகாப்பிற்குரிய இடங்கள், கட்டிடங்கள், தகவல் தொடர்பு நிலையங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொடர்ச்சியான ரோந்து பணி செய்து பாதுகாப்பை பலப்படுத்திட அறிவுறுத்தினார்.
மேலும் பாதுகாப்பு சென்னை காவல் பிரிவு போலீசார் மூலம் நாசவேலை எதிர்ப்பு சோதனை (Anti Sabotage Check) வெடிபொருள் கண்டறிதல், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் உரிய கருவிகளுடன் தணிக்கை செய்து உரிய பாதுகாப்பை கண்காணித்திட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் உயர்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து காவல் துறை பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திடவும், முன்னேற்பாடுகளில் தொய்வு இல்லாமல் தொடர்ச்சியான பாதுகாப்பு பணிகளை தொடரவும் காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தினார்.
The post குடியரசு தினவிழா பாதுகாப்பு; சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.