×

தாம்பரத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: தாம்பரம்  கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ, புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகம், 1வது தளம், முல்லை நகர், மேற்கு தாம்பரம், சென்னை-45 என்ற அலுவலக முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post தாம்பரத்தில் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Power board ,Tambaram ,CHENNAI ,Tambaram district ,Tamil Nadu Power Board ,Tambaram Kotta ,Dinakaran ,
× RELATED ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது