×

பிரபாஸின் சலார் ரிலீஸ் எப்போது?

ஐதராபாத்: கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். அவரது அடுத்த படம் ‘சலார்’. இதில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள். கேஜிஎப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பட ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளில் படம் வெளியாக உள்ளது. படத்தை திட்டமிட்டபடி, செப்டம்பர் 28ம் தேதி ரிலீஸ் செய்வோம். வதந்திகளை நம்ப வேண்டாம் என ஹோம்பலே பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

The post பிரபாஸின் சலார் ரிலீஸ் எப்போது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,KGF ,Prashant Neel ,Prabhas ,Prithviraj ,Shruti Haasan ,Hombale Films ,Gandhara ,Prabhas' ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...