தூத்துக்குடி, ஜன. 22: தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறனின் 217வது குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விடுதலை போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு, தனது கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் சென்றடைய உதவிய, சுதந்திர போராட்ட வீரர், மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ் வாஸ் கோமஸ் பரத வர்ம பாண்டியன் என்கிற பாண்டியபதி தேர்மாறனின் 217ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திற்கு அருகில் அமைந்துள்ள பாண்டியபதி தேர்மாறன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரதர் நலச்சங்க முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னாண்டோ, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், அமமுக மாவட்ட செயலாளர் பிரைட்டர், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின், மீனவ மக்கள் கட்சி தலைவர் கோல்டன் பரதர், தேசிய மீனவர் கட்சி பொதுச்செயலாளர் சேனாதிபதி சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன் குமார், அருட்தந்தை ஜேசுதாஸ், தேர்மாறன் கல்லறை மீட்புக்குழு சார்பில்,ஆரோக்கியராஜ், அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லார்மின், விஜயகுமார், சீதாதி கிங், ஆரோக்கியசாமி, கனகராஜ், ஆனந்தி, பெசி மற்றும் ஜான் பெர்னாண்டோ, ஜான்சன் தல்மேதா, ஸ்பிக் ராஜ், சங்கரசுப்பு, ராஜசேகர், பிரசாந்த் வாஸ், சுமன் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
The post மன்னர் தேர்மாறன் நினைவிடத்தில் அஞ்சலி appeared first on Dinakaran.