×

திமுக மாணவர் அணி சார்பில் 25ம் தேதி கோத்தகிரியில் வீர வணக்க நாள் கூட்டம்

 

ஊட்டி, ஜன. 22: திமுக மாணவர் அணி சார்பில் வரும் 25ம் தேதி கோத்தகிரியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் கூட்டம், மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார்.

மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, பில்லன், சதக்கத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாணவர் அணி சார்பில் வரும் 25ம் தேதி கோத்தகிரியில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், தலைமை கழக பேச்சாளர்கள் பவானி கண்ணன், திருப்பூர் ரஜினி செந்தில், கோவை வில்லவன் ஆகியோர் கலந்து சிறப்புரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி சிறப்புடன் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும், மாணவர் அணியின் தொடர் ஆக்க பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அசார்க்கான், சந்திரகுமார், அபீர் ரகுமான், அகல்யா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக மாணவர் அணி சார்பில் 25ம் தேதி கோத்தகிரியில் வீர வணக்க நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK student wing ,Heroic Tribute Day ,Kotagiri ,Ooty ,DMK ,Nilgiris ,District ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலை...