×

காஞ்சிக்கு சுற்றுலா வந்த வடமாநிலத்தவர் பலி

 

காஞ்சிபுரம், ஜன.22: மகாராஷ்டிர மாநிலம், ஹங்கோலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷியாம் ராவ் மகன் திலீப் (48). இவர், தனது உறவினர்களுடன் காஞ்சிபுரம் மற்றும் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க 2 பேருந்துகளில் சுற்றுலா வந்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி அருகே சென்றபோது, இயற்கை உபாதை கழிப்பதற்காக 2 பேருந்துகளையும் நிறுத்தி உள்ளனர்.

அப்போது, பேருந்தில் இருந்து இறங்கிய திலீப் சாலையை கடக்க முற்பட்டபோது, காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் சாலையில் அதிவேகமாக வந்த டூவீலர் மோதியதில், திலீப் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காஞ்சிக்கு சுற்றுலா வந்த வடமாநிலத்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Kancheepuram ,Dilip ,Shyam Rao ,Hangoli district ,Maharashtra ,Keelambi ,
× RELATED காஞ்சியில் பல்வேறு கோரிக்கைகளை...