×

ஐஐடி இயக்குநரை பதவியில் இருந்து நீக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: கோமியம் குடித்தால் ஜுரம் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறியுள்ளார். இவர் தலைமையில் சென்னை ஐஐடி செயல்படுமானால் அது அந்நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களைப் பாழாக்கிவிடும். ஆகவே, பேராசிரியர் காமகோடியை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஐஐடி இயக்குநரை பதவியில் இருந்து நீக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : STBI ,IIT ,Chennai ,president ,Nellai Mubarak ,IIT Chennai ,Kamakoti ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் பகுதியில் கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும்