- திருமுருகன் காந்தி
- செயிமன்
- சென்னை
- இயக்கங்களின் ஜனநாயக கூட்ட
- சேப்பாக்கம்
- செய்தியாளர் மன்றம்
- நிர்வாக இணைப்பாளர்
சென்னை : பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் ஜனநாயக கூட்டமைப்பு இயக்கங்கள் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பெரியாரை பற்றி அவதூறாக பேசிவிட்டு அதற்குரிய ஆதாரத்தை கொடுக்காமல் இருக்கிறார் சீமான். 8% சதவீத வாக்கு உள்ள ஒரு கட்சி தலைவர் பொய் பேசலாமா? பொதுவெளியில் விவாதத்திற்கு வர மறுப்பது ஏன்?. சீமான் என்ன போராட்டம் நடத்தி இருக்கிறார்? அவர் பேச்சு எல்லாம் பத்திரிகையாளர் முன்புதான்.
பெரியாரை அவமதித்ததை கண்டித்து சீமான் வீட்டை முற்றுகையிடுவோம். சீமானுக்கு திட்டம் வகுத்து தந்தது ஆர்எஸ்எஸ் தான்; சீமானின் ஒவ்வொரு வார்த்தையும் ஆர்எஸ்எஸ் புத்தகத்தில் உள்ளது. சீமான் கருத்தில் உடன்பாடில்லை; இது கட்சியின் கருத்தில்லை என நாதக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். மிகப் பெரிய தலைவர் குறித்து அவதூறு பரப்பும் சீமானால் நாளைக்கு சாமானிய மக்களுக்கு கூட எது வேணாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரியாரை இழிவாகப் பேசி வாக்கு வாங்கி விட முடியும் என்பதை காட்டுவதற்காக சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசுகிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 8% சதவீத வாக்கு உள்ள ஒரு கட்சி தலைவர் பொய் பேசலாமா? :பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானுக்கு திருமுருகன் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.
