×

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 308 மனுக்கள் வருகை

திருவாரூர், ஜன. 21: திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மக்களிடமிரு ந்து 308 கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாரு பெற்றுக்கொண்டார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சாரு தலைமை வகித்தார். இதில் பொது மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 308 மனுக்களை அளித்தனர். மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாரு, சம்மந்தப்பட்டத்துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

மேலும் வழக்கம் போல் தரைதளத்தில் மாற்றுதிறனாளிகளிடம் அவர்களது கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டதுடன் 5 நபர்களுக்கு தலா ரூ.8 ஆயிரத்து 500 வீதம் செயற்கை கால் மற்றும் ஒருவருக்கு ரூ.16 ஆயிரத்து 100 மதிப்பில் கைபேசி என மொத்தம் 6 நபர்களுக்கு ரூ 58 ஆயிரத்து 600 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாரு வழங்கினார். இதில் டி.ஆர்.ஒ சண்முகநாதன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 308 மனுக்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Collector ,Saru ,Thiruvarur Collector ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் பயிர்...