- நாசரேத் நூலகம்
- நாசரேத்
- நாசரேத் நூலகம் வள்ளுவர் வாசகர் வட்டம்
- வாசகர் வட்டம்
- ஜனாதிபதி
- அய்யாக்குட்டி
- நூலகர்
- பொன் ராதா
- காசிராசன்
- தின மலர்
நாசரேத், ஜன. 21: நாசரேத் நூலகத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் நூலக அரங்கில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா, பேராசிரியர் காசிராசன், துணை தலைவர் கொம்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் வரவேற்றார். நவீன நாகரிகம் குடும்பத்தில் தருவது குதூகலமே… குழப்பமே… என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு பாமணி நடுவராக செயல்பட்டார். குதூகலமே என்று சரவணக்குமார், சொர்ணவல்லி ஆகியோரும், குழப்பமே என்று சுவாமிநாதன், இசக்கியம்மாள் ஆகியோரும் வாதிட்டனர். இதில் மருத்துவர் விஜய் ஆனந்த், லோபோ மெட்ரிக். பள்ளி தாளாளர் முருகன், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அருள்ராஜ், செல்வின், தேவதாசன், தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணராஜ், சிவா, செல்லப்பாண்டியன், ஞானையா, கிறிஸ்டோபர், விவின் ஜெயக்குமார், சுரேஷ், சங்கர், ஜான் பிரிட்டோ, மனோகரன் உள்பட இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். வாசகர் வட்ட முன்னாள் தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
The post நாசரேத் நூலகத்தில் சிறப்பு பட்டிமன்றம் appeared first on Dinakaran.
