வேலூர், ஜன.21: கொடுத்த கடனை திருப்பி செலுத்துவதாக கூறினாலும், சொத்தை கேட்டு நெருக்கடி தருவதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகன் பிசினஸ் செய்து வந்தார். ஷேர் மார்க்கெட் தொழில் செய்வதற்காக ஒருவர் ₹15 லட்சத்தை எனது மகனிடம் கொடுத்தார். ஆனால் எனது மகன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டார். நாங்கள் கடன் கொடுத்தவருக்கு ₹6 லட்சத்தை திருப்பிக் கொடுத்து விட்டோம். மீதி பணம் ₹9 லட்சத்தை திருப்பி தருவதாக கூறினோம். ஆனால் அந்த நபர் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து சொத்தை எழுதி கேட்கிறார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கடனை திருப்பி கேட்டு நெருக்கடி எஸ்பி அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.