- திருவட்டார்
- Kulasekaram
- நேரு யுவகேந்திரா
- தோட்டவரம் சிக்மா விளையாட்டு மற்றும் கலை மன்றம்
- சிலம்பம்
- புத்தங்கடை
- திருவட்டார்…
குலசேகரம்,ஜன.21: நேரு யுவகேந்திரா மற்றும் தோட்டவாரம் சிக்மா விளையாட்டு மற்றும் கலை மன்றம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பம், கைப்பந்து, ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தியது. திருவட்டார் புத்தன்கடை பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் சிக்மா விளையாட்டு மன்ற தலைவர் திபோர்சியஸ், கைப்பந்து பயிற்சியாளர் முத்துராஜ், உடற்கல்வி ஆசிரியர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருவட்டாரில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.