- பஞ்சாப்
- முதல் அமைச்சர்
- புது தில்லி
- பியாந்த் சிங்
- சண்டிகர்
- பல்வந்த்சிங் ரஜோனா
- பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம்
புதுடெல்லி: பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் கடந்த 1995ம் ஆண்டு ஆக.31 அன்று சண்டிகரில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவருடன் 16 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு பஞ்சாப் சிறப்பு நீதிமன்றம் 2007ஜூலை மாதம் மரண தண்டனை விதித்தது. 2023 மே 3 அன்னு உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இதையடுத்து ரஜோனா கருணை மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக உரிய நேரத்தில் மனுவை பரிசிலிக்க வேண்டும் என்று 2023 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ரஜோனா மனு மீது இன்னும் முடிவு எடுக்காததால் தனது மரண தண்டனையை, ஆயுள்தண்டனையாக மாற்றும்படி ரஜோனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பிரசாந்த்குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பாது நீதிபதிகள் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம்,’ கடைசி வாய்ப்பாக நாங்கள் மார்ச் 18 வரை உங்களுக்கு கால அவகாசம் தருகிறோம். ஒன்று நீங்கள் முடிவு எடுங்கள் அல்லது இல்லையெனில் தகுதியின் அடிப்படையில் நாங்கள் உத்தரவிடுவோம்’ என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
The post பஞ்சாப் முதல்வர் படுகொலை வழக்கில் கருணை மனு மீது முடிவெடுக்க கெடு appeared first on Dinakaran.