- அப்பல்லோ மருத்துவமனைகள்
- டிஜிட்டல் ஹெல்த் துல்லிய மருத்துவ மையம்
- பிரதாப் ரெட்டி
- சென்னை
- அப்பல்லோ பல்கலைக்கழகம்
- அப்பல்லோ மருத்துவமனைக் குழு
- லெய்செஸ்டர் பல்கலைக்கழகம்
- இங்கிலாந்து
- டிஜிட்டல் ஹெல்த் துல்லிய மருத்துவத்திற்கான மையம்
- சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
சென்னை: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூரில் உள்ள அப்போலோ பல்கலைக்கழக வளாகத்தில் அப்போலோ பல்கலைக் கழகமும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமமும் இங்கிலாந்தைச் சேர்ந்த லெஸ்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சென்டர் பார் டிஜிட்டல் ஹெல்த் ப்ரெஸிசன் மெடிசின் என்ற புதிய மையத்தை தொடங்கி உள்ளது. இதனை அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனத் தலைவருமான மருத்துவர் பிரதாப் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையத்தின் கூடுதல் இயக்குனர்களாக லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் இதயவியல் துறை பேராசிரியர் சர் நீலேஷ் ஜே சமானி மற்றும் அப்போலோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைமை மருத்துவத் தகவல் அதிகாரி மருத்துவர் சுஜாய் கர் ஆகியோர் செயல்படுகின்றனர். இந்நிகழ்ச்சியில் பிரதாப் ரெட்டி கூறியதாவது: இந்த மையத்தின் மூலம் ஒரு நோயாளியின் வியாதியை யூகிப்பது, வரும் முன்னர் தடுப்பது, நோயைக் கண்டறிவது, நோய் பராமரிப்பு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைக் கொண்டு வரப்படும். மேலும் இந்த மையம் நோயாளியைத் தனிப்பட்ட வகையில் கவனிப்பதிலும் தரவுகள் அடிப்படையிலான சிகிச்சை, மருந்துகளைத் தேர்வு செய்வதிலும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
The post சித்தூரில் அப்போலோ மருத்துவமனை சார்பில் டிஜிட்டல் ஹெல்த் ஆண்டு ப்ரெஸிசன் மெடிசின் மையம்: பிரதாப் ரெட்டி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.