×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘கரும்பு விவசாயி’ சின்னம் கோரப்பட்ட நிலையில் நாதக வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி சென்னையில் காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 7-ந்தேதி அறிவித்தது. அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 47 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ‘மைக்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் ‘கரும்பு விவசாயி’ சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறி, மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ‘கரும்பு விவசாயி’ சின்னம் கோரப்பட்ட நிலையில் நாதக வேட்பாளருக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Erode East Midterm Election ,Mike ,Nathaka ,Erode ,Erode East Block ,M. L. A. E. ,V. K. S. Ilangovan ,Chennai ,Erode East ,Dinakaran ,
× RELATED 24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு...