×

ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி, தலைமை எடுத்த முடிவிற்கு மாறாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பி.செந்தில் முருகன் (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Erode ,Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,Edappadi K. Palaniswami ,Dinakaran ,
× RELATED இன்னும் 6 மாதத்தில் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும்: எடப்பாடி பேட்டி