முல்தான்: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சை துவக்கிய பாக். 230 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. பின், முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 137க்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 2வது இன்னிங்சை ஆடிய பாக். 3ம் நாளில் 157 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், 251 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தால் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். இதனால், 127 ரன் வித்தியாசத்தில் பாக். அபார வெற்றி பெற்றது.
The post முதல் டெஸ்ட்டில் வெ.இ. அணி பாக்.கிடம் சரண் appeared first on Dinakaran.