×

பள்ளி செல்லும் சாலை சேதம் மறியலில் ஈடுபட மக்கள் முடிவு

தேவகோட்டை, ஜன.19: தேவகோட்டை தாலுகா புளியால் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் மாநில நெடுஞ்சாலையின் வலதுபக்கம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு புளியால் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மாணவ,மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட தார்ச்சாலையானது முற்றிலும் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களும் பள்ளிக்கு செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  இந்த சாலைக்கு புதிதாக சாலை அமைத்து தரக் கோரிக்கை வைத்தும், மாவட்ட கலெக்டருக்கு நேரிடையாக மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதுகுறித்து பருத்தியூர் கிராம விவசாயிகள் சங்கத்தலைவர் சூசைமாணிக்கம் கூறுகையில், புளியால் அரசு உயர்நிலைப் பள்ளி செல்லும் சாலையை அரசு துரித நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். சாலை அமைத்துத்தர கோரிக்கை வைத்து பிப்ரவரி மாதம் 3ம் தேதி கிராம மக்களைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தார்.

The post பள்ளி செல்லும் சாலை சேதம் மறியலில் ஈடுபட மக்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Devakottai ,Puliyal ,Devakottai taluka ,Trichy-Rameswaram ,highway ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி