சாயல்குடி, ஜன.19: முதுகுளத்தூரில் தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தேவேந்திரகுல வேளாளர்கள் சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் பிரிவை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், 10% சதவீதம் தனி ஒதுக்கீடு வேண்டும், இமானுவேல் சேகரனுக்கு சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோர்க்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற 275 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஏ.டி.எஸ்.பி சுப்பையா தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post தேவேந்திரகுல வேளாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
