திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அசைவ உணவை சாப்பிட்டு கொண்டிருந்த தமிழக பக்தர்களை போலீசார் எச்சரித்து அந்த உணவை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புனித தன்மையை காப்பாற்றும் விதமாக திருமலையில் மது, மாமிசம், புகையிலை, குட்கா போன்றவை பயன்படுத்தவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அலிபிரி டோல்கேட்டில் பக்தர்களின் உடைமைகள் முழு சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திருமலை ராம்பகிஜா பஸ் நிலைய வளாகத்தில் தமிழக பக்தர்கள் சிலர் அவித்த கோழி முட்டைகள் மற்றும் வெஜ் புலாவ் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை கண்ட அங்கிருந்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பக்தர்களின் உணவை பறிமுதல் செய்தனர். திருமலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பக்தர்களை கண்டித்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். தடைசெய்யப்பட்ட உணவு சோதனைச் சாவடியைத் தாண்டி திருமலைக்கு எப்படி வந்தது என சக பக்தர்கள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே அசைவ உணவுடன் தமிழக பக்தர்கள்: பறிமுதல் செய்து எச்சரித்த போலீசார் appeared first on Dinakaran.