×

திருவாரூர் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் உளுந்து பயிர்கள்

 

திருவாரூர், ஜன. 18: திருவாரூர் மாவட்டத்தில் கார்த்திகை பட்ட சாகுபடியாக 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர் செடிகள் தற்போது பூ பூத்து காய் வைத்துள்ளது. வரும் 15 தினங்களில் அறுவடைக்கு வரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து நீரானது உரிய முறையில் கிடைத்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் விவசாயிகள் 3 போக நெல் சாகுபடி மேற்கொண்டு வந்தனர்.

அதன்பின்னர் மேட்டூர் அணையிலிருந்து உரிய நீர் கிடைக்காது மற்றும் பருவமழை பொய்த்துப் போவது போன்ற காரணங்களினால் 3 போகம் என்பது 2 போகமாக மாறி அதன் பின்னர் ஒருபோக சாகுபடியாக மாறிய நிலையில் தற்போது 4 ஆண்டு காலமாக பழைய முறைப்படி இருபோக சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்துசாகு படி பணிகளை விவசாயிகள் மேற்கொள்வது வழ க்கமாக இருந்து வருகிறது.

அதன்படி தற்போது சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் உளுந்து மற்றும் பச்சை பயிர் விதைப்பிலும் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி விவசாய வயல் வரப்புகள், மேடான பகுதி மற்றும் சமவெளிப் பகுதிகளில் கார்த்திகை மாதத்தில் விவசாயிகள் உளுந்து பயிர் விதைப்பதும் வழக்கமாக இருந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கார்த்திகை மாத பட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது பூ பூத்து காய் வைத்துள்ளது. இந்த பயிர்கள் வரும் 15 தினங்களில் அறுடைக்கு தயராகும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post திருவாரூர் பகுதியில் அறுவடைக்கு தயாராகும் உளுந்து பயிர்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி