- எம்.ஜி.ஆர்
- தஞ்சாய் தமிழ் காலி தஞ்சாவூர்
- பாரத
- ரத்னா
- டாக்டர்
- எம்.ஜி.ஆர்
- எம். ஜி. தமிழ் பல்க
- துணை வேந்தர்
- ஷங்கர்
- எம்ஜிஆர் சிலை
- தஞ்சை தமிழ்
தஞ்சாவூர் ஜன.18: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர்(பொ) பேராசிரியர் சங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ.) முனைவர் வெற்றிச்செல்வன், ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் பாரதஜோதி, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் முருகன், கல்வியாளர்கள் மற்றும் அலுவல் நிலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், தஞ்சையில் உள்ள எம்.ஜி.ஆர் முழு உருவ சிலைக்கு அதிமுக, அமமுக, ஒ.பி.எஸ்., அணியினர் தனித் தனியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
The post தஞ்சை தமிழ்ப்பல்கலை.,யில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.
