சென்னை: எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை இது ஏழையின் கட்சி. எம்ஜிஆரின் புகழ் என்பது எல்லா தரப்பட்ட மக்களும் முழுமையாக போற்றக்கூடிய வகையில் உள்ளது. குருமூர்த்தி என்னிடம் பலமுறை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். மீண்டும் அதற்கு ஆளாகக் கூடாது என்றால் வாயை அடக்க வேண்டும். பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்பது, கட்சி எடுத்த முடிவு. கட்சி முடிவு எடுத்த பிறகு இவர் என்ன பேசுவது? இவர் பேச வேண்டிய அவசியமே கிடையாது.
வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் வாங்கி கட்டிக் கொள்ள நேரிடும். வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்க ரூ.526 கோடி பணம் இருக்கிறது. ஆனால், பொங்கல் பரிசாக ரூ.1000 கொடுக்க பணம் இல்லையா? பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பெண்கள், பாலியல் விவகாரம் என தமிழக மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். எங்கள் தலைவரின் பெயரை உச்சரிக்காமல் உலக அரசியலும் கிடையாது, தமிழ்நாடு அரசியலும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.