அரூர், ஜன.17: மொரப்பூர் பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகிறது. மதுபான கடை அருகாமையில் அதிக அளவில் சில்லி சிக்கன் கடைகள் உள்ளது. அந்த கடைகளை சுற்றியும், முனியப்பன் கோயில், குடியிருப்பு பகுதிகள், பள்ளிகளுக்கு அருகாமையில் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயத்துடன் செல்ல வேண்டி உள்ளது. மேலும், அரூர்-தர்மபுரி, மொரப்பூர்- கிருஷ்ணகிரி மெயின் சாலை என்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நாய் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள், நாய் குரைப்பதால் பயந்து ஓடுவதில் கீழே விழுந்து அடிபடும் சூழல் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது, திடீரென சாலையின் குறுக்கே வரும் நாய்களால் விபத்தில் அடிபட வேண்டிய நிலையும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, கூட்டமாக சுற்றி திரியும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கூட்டமாக திரியும் தெருநாய்களால் பீதி appeared first on Dinakaran.