×

மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டி

பள்ளிபாளையம்,ஜன.17: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிபாளையத்தில் நடந்த மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டியில், சேலம் அணியினர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. பள்ளிபாளையம் ஒன்றியம், பல்லக்காபாளையம் முனியப்பன் கோயில் திடலில், மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டி நடைபெற்றது. பல்லவன் பாய்ஸ் கபாடி குழு நடத்திய போட்டியில் சேலம் கேஏகேசி பெண்கள் அணியினர் முதலிடம் பிடித்தனர். செங்கல்பட்டு விஎல்எஸ் அணி 2ம் பரிசும், திருச்செங்கோடு விவேகானந்தா அணி 3ம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் நாச்சிமுத்து, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் சௌந்தரம் ஆகியோர் பரிசுத் தொகை மற்றும் வெற்றி கோப்பையும் வழங்கி பாராட்டினர்.

The post மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Salem ,Pongal festival ,Pallipalayam Union ,Pallakkapalayam ,Muniyappan Temple ,Dinakaran ,
× RELATED காவிரி ஆற்றில் துர்நாற்றம்-ரசாயன கழிவுகள் மிதப்பு