- வெட்டுவேண்டி என்விகேஎஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
- Kulasekaram
- வெட்டுவேண்டி என்விகேஎஸ் வித்யாலயா பள்ளி
- என்விகேஎஸ் கல்வி குழுமம்
- ஜனாதிபதி
- வழக்கறிஞர் ரகுகுமார்
- துணை ஜனாதிபதி
- டாக்டர் முகுந்தன்
- வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்
- தின மலர்
குலசேகரம், ஜன. 17: வெட்டுவெந்தி என்.வி.கே.எஸ். வித்யாலயா பள்ளியின் 13வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. என்.வி.கே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் வழக்கறிஞர் ரகுகுமார், துணைத் தலைவர் டாக்டர் முகுந்தன் மற்றும் செயலர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவருமான டாக்டர் ஈஸ்வர், பாரம்பரிய நடனக் கலைஞர் சௌபாக்யா வெங்கடேஷ் கலந்து கொண்டனர்.
விழாவில் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர் விருது, என்.வி.கே.எஸ் பள்ளிகளின் கல்வி ஆலோசகரான சுரேஷ் குமாருக்கு என்.வி.கே.எஸ். கல்விக்குழுமத்தின் செயலர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் வழங்கி கௌரவித்தார். மாணவர்கள் ஷாருகேஷ், விருஷிகா, ஹேமிஷா, தீபிகா மற்றும் சரவணவேல் ஆகியோரின் கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு புத்தகம் எழுத வழிகாட்டியதற்காக நாவலாசிரியர் மலர்வதிக்கு பாராட்டு விருது என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி முதல்வர் லதா வழங்கினார்.
பள்ளி முதல்வர் அனிதா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் ஜா வரவேற்று பேசினார், ஆசிரியை சுமா கோபன் நன்றி கூறினார், ஆசிரியைகள் மகிளா, தீப்தி, ஆர்யா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். கல்வி குழு உறுப்பினர்கள், என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர்கள் ஆஷா, அனிதா ஷாம்லால், மற்றும் ஆசிரியர்கள், என்.வி.கே.எஸ் வித்யாலயா பள்ளியின் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். என்.வி.கே.எஸ். பள்ளிகளின் கல்வி இயக்குனர் ராமச்சந்திரன் நாயர் மற்றும் உதவிப் பேராசிரியர் பிரசோப் மாதவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
The post வெட்டுவெந்தி என்.வி.கே.எஸ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.
