திருவட்டார், ஜன. 17: 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் தைமாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிசேகம் நடைபெறுவது வழக்கம்.2 நாட்களுக்கு முன் கோயில் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்தினார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளிய ஆதிகேசவப்பெருமாள், தேவி, பூதேவி விக்ரகங்களுக்கு களப அபிஷேகம் நடந்தது. பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. வரும் 25ம் தேதி வரை தினமும் காலையில் களப அபிஷேகம் நடைபெறும். களப பூஜையின் இறுதி நாளான 26ம் தேதி காலை 10 மணி அளவில் 47 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறும்.
The post திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் களப பூஜை appeared first on Dinakaran.
