×

சட்டீஸ்கர் என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை

புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பஸ்தர் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அவர்களை நோக்கி நக்சல்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த ஐஇடி குண்டுவெடிப்பில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பிஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

The post சட்டீஸ்கர் என்கவுன்டரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Chetteskar ,Encounter ,New Delhi ,southern Bastar ,Chhattisgarh ,Bijapur district ,Chhattisgarh Encounter ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...