×

பொங்கல் விழா கோலப்போட்டி நகர்மன்ற தலைவிக்கு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டி, ஜன. 17: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகர் 15வது வார்டு தெரு நல அமைப்பின் சார்பில் பொங்கல் விழாவினை முன்னிட்டு மகளிருக்கான கோலப் போட்டி மற்றும் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. தெருநல அமைப்பு தலைவர் நரசிம்மன் தலை மை வகித்தார். துணைத் தலைவர் பாலு, இணைச்செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முன்னதாக தெரு நல அமைப்பின் செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் ஆடிட்டர் ஜவகர், வேதரெத்தினம், வேதையன், மருதமுத்து, ராமலிங்கம், சண்முகம், சந்திரமோகன், பிச்சைபிள்ளை, கருணாமூர்த்தி, ரகுமாறன், சேதுராமன், ரவிசங்கர், வெற்றிவேல், ஐயப்பன்,ஒரு வினோத்ராஜ், கணேஷ் நாகராஜ், இளையராஜா, வெங்கடேஷ், செல்வகுமார், ஆனந்த், ஜாலி புக் சென்டர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர், நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன், கோலப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் தெருநல அமைப்பு நிர்வாகிகளின் செயல்பாடுகளை பாராட்டினர். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரு நல அமைப்பின் சார்பாக பரிசுகளை வழங்கி பேசினார். நிறைவில் பொருளாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.

The post பொங்கல் விழா கோலப்போட்டி நகர்மன்ற தலைவிக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival kolapotti ,Municipal Council ,Thiruthuraipoondi ,Pongal festival ,Kavitha Pandian ,Thiruthuraipoondi Samiyappa Nagar 15th Ward Street Welfare Organization ,Tiruvarur district ,Street Welfare Organization… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி