- பொங்கல் கோலம் போட்டி
- தஞ்சாவூர் அப்பர் ரோடு
- தஞ்சாவூர்
- பொங்கல் கோலம்
- பிரியங்கா பங்கஜம்
- தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
- மேல்
- சாலை
- தின மலர்
தஞ்சாவூர், ஜன.17: தஞ்சாவூர் மேல வீதியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் சார்பில் பொங்கல் கோலப் போட்டி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நமது பண்பாட்டின் சான்றாக புள்ளி கோலங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சுமார் 300 மீட்டர் தூரம் வெள்ளை புள்ளி கோலங்கள் வரையப்பட்டது. பங்கேற்ற அனைவரும் சிறப்பான முறையில் இந்த புள்ளிக் கோலத்தை வரைந்தனர். கோலங்களை பார்த்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டினர்.
The post தஞ்சாவூர் மேல வீதியில் பொங்கல் கோல போட்டி appeared first on Dinakaran.
