×

அன்னவாசல் பகவதி அம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு

இலுப்பூர், ஜன 17: அன்னவாசலில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் மேட்டு தெருவில் இப்பகுதியில் பிரசித்திப்பெற்ற பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இப்பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டையொட்டி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்த பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அன்னவாசல் முக்கிய வீதியில் வழியே சென்று ஊரணியில் கரைத்தனர். இப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

The post அன்னவாசல் பகவதி அம்மன் கோயிலுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Annavasal ,Bhagavathy Amman Temple ,Iluppur ,Pongal festival ,Annavasal Mettu Street, Pudukkottai district ,
× RELATED ஓய்வூதியர் தின விழா