- பொங்கல்
- தாந்தோணிமலை காவல் நிலையம்
- கரூர்
- Thanthonimalai
- காவல் நிலையம்
- பொங்கல்,
- பொங்கல் திருவிழா
- கரூர் மாநகராட்சி…
- தின மலர்
கரூர், ஜன. 17: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாந்தோணிமலை காவல் நிலையம் முன்பு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார். சத்தியமூர்த்தி நகர் சிஎஸ்ஐ சர்ச் பாதர் சேகர், தில்லை நகர் சிஎஸ்ஐ சர்ச் பாதர் ஜேம்ஸ், தாந்தோணிமலை முத்துமாரியம்மன் கோயில் அர்ச்சகர் மோகன், தெற்கு காந்திகிராமம் இஸ்லாமிய அறக்கட்டளை பள்ளிவாசல் இமாம் முகமது அசார், அரசு காலனி சேர்வைகாரன்பட்டி நரிக்குறவர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தாந்தோணிமலை காவல் நிலைய எஸ்ஐக்கள், போலீசார்கள் அனைவரும் தமிழர் பண்பாட்டை வலியுறுத்தும் வகையில் உடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.
The post தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.