×

மாமல்லபுரம் கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தினர் மரியாதை

மாமல்லபுரம்: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு. மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவரும், மதிமுக துணை பொதுச் செயலாளருமான மல்லை சி.ஏ.சத்யா தலைமையில், மல்லை தமிழ்ச்சங்க செயலாளர் மூத்த சிற்பி பாஸ்கரன், பொருளாளர் சிற்பி பெருமாள், சங்க நிர்வாகிகள் ஆசிரியர் ஜெகன்நாதன், சிற்பிகள் முருகன், இளையராஜா ரமேஷ் ஸ்தபதி, குருமுருகன், அப்துல் அமீது, மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது, திருள்ளுவர் எழுதிய திருக்குறளின் முக்கிய அதிகாரங்களை 1 மணி நேரத்துக்கு மேலாக வாசித்து திருக்குறள் மூலம் அவர் எடுத்துரைத்த கருத்துக்கள், தமிழ் மொழிக்கு ஆற்றிய பணிகள் குறித்து பேசிய மல்லை தமிழ் சங்கத்தினர் அவருக்கு புகழாரம் சூட்டி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது, கடற்கரையில் பாசிமணி விற்கும் நரிக்குற பெண்கள் சிலர் கூட்டமாக வந்து திருவள்ளுவர் சிலை முன்பு நின்று சாமி, சாமி என கூறிக்கொண்டே கையெடுத்து வணங்கி, மல்லை தமிழ்ச்சங்கத்தினருக்கு பாசிமணி அணிவித்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post மாமல்லபுரம் கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தினர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Tamil Sangha ,Thiruvalluvar statue ,Mamallapuram beach ,Mamallapuram ,Thiruvalluwar Day ,President ,Malala Tamil Sangha ,Deputy General Secretary of ,Council ,Satya ,Malda Tamil Sangha ,Senior Architect ,Baskaran ,Treasurer ,Sarpi Perumal ,Tamil Sanghath ,Thiruvalluwar ,
× RELATED சித்திரை முழு நிலவு மாநாட்டில்...