×

வையாவூர் வெங்கடேசபெருமாள் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

மதுராந்தகம்: தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் காணும் பொங்கல் தினமான நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  படாளம் அருகே தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை வையாவூர் அலர்மேல் மங்கா நாயகா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பொங்கல் விழா தொடர்ந்து மூன்று தினங்களாக மிக விமர்சையாக நடைபெற்று வந்தது. இதில் காணும் பொங்கலான நேற்று காலை 3 மணி அளவில் மங்கல இசை உடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், தாயார், கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரசன்ன வெங்கடேச பெருமானை வணங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையர் குமரதுறை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் தினேஷ், முன்னாள் அறங்காவலர் ஏழுமலை, செயல் அலுவலர் மேகவண்ணன், தலைமை அர்ச்சகர் பாலாஜி பட்டச்சாரியார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா ஏழுமலை உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post வையாவூர் வெங்கடேசபெருமாள் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vaiyavur Venkatesa Perumal ,Temple ,Vaiyavur Prasanna Venkatesa Perumal Temple ,Tirumala ,Thenthirupathi ,Pongal ,Vaiyavur Alarmel Manga Temple ,Patalam… ,Vaiyavur Venkatesa Perumal Temple ,
× RELATED திருவெற்றியூர் கோயில் குளத்தில்...