- ரூபட்டினம் பெருமாள் கோவில்
- காரைக்கால்
- நாகா தியாகராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருப்பட்டினம் வீழி வரதராஜப் பெருமாள் கோவில்
- திருநாளாம் பொங்கல்
- திருப்பட்டினம் வீழி வரதராஜா
- பெருமாள்
- கோவில்
- காரைக்கால் மாவட்டம்…
காரைக்கால், ஜன.14: திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை தொகுப்பை நாக தியாகராஜன் எம்.எல்.ஏ வழங்கினார். காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தின் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சில்வர் பானை, பச்சரிசி, வெல்லம், திராட்சை, கரும்பு, இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து ஆகிய பொருள்களை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் கலந்து கொண்டு தலைமை வகுத்து அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை தொகுப்பை வழங்கி பொங்கல் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார்.
The post ருப்பட்டினம் பெருமாள் கோயிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.