×

ஏழை, எளியோருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

 

ராஜபாளையம், ஜன.14: ராஜபாளையம் தொழிலதிபர் குவைத்ராஜா ஏழை, எளிய மக்கள் 1500 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கினார். ராஜபாளையம் ஆர்.ஆர் நகர் பகுதியில் சுரன் நர்சிங் ஆப் கல்லூரி நிறுவனர் மற்றும் குவைத் ராஜா மக்கள் இயக்கம் சார்பில் தொழிலதிபர் டாக்டர் குவைத் ராஜா, அவரது மனைவி சுபா ஆகியோர் பொங்கல் திருநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கினர். சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய மக்கள் 1500க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசாக கரும்பு, வேஷ்டி, சேலை மற்றும் ரொக்க பணம் வழங்கி வாழ்த்து கூறினர்.

The post ஏழை, எளியோருக்கு பொங்கல் பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Kuwait ,Raja ,Suran Nursing App College ,Rajapalayam RR Nagar ,Makkal Iyyakam… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா