×

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

 

தேனி, ஜன. 14:தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். டிஆர்ஓ ஜெயபாரதி முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்திற்கு எப்போதும் அதிக அளவில் பொதுமக்கள் வரும் நிலையில், நேற்று பொங்கல் போகிப்பண்டியையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கொண்ட 95 மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.முன்னதாக, தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான சிங்காரவேலர் விருது பெற்ற தேனி தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியை கலெக்டர் ஷஜீவனா பாராட்டினார். இதனைத்தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.4ஆயிரத்து 700 மதிப்பிலான செயற்கைக் கால்கள் 2 பேருக்கு கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன், பயிற்சி துணை ஆட்சியர் டினுஅரவிந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Theni ,People's Minuteer ,Deni District Collector's Office ,Shajeevana ,DRO ,Jayabharati ,
× RELATED தேனியில் வாகனத்தில் இருந்து வெளியேறிய பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு