×

மணிமுத்தாறு அணை பூங்காவை சீரமைக்க நடவடிக்கை இசக்கிசுப்பையா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்

விகேபுரம்,ஜன.14: மணிமுத்தாறு அணை பகுதியில் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசக்கி சுப்பையா எம்எல்ஏ கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மணிமுத்தாறு அணை பகுதியில் உள்ள பூங்கா புனரமைக்கப்படுமா? என்று சட்டப்பேரவையில் அம்பை தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா கேள்வி எழுப்பினார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கையில், ‘நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் உள்ள பூங்காவை புனரமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post மணிமுத்தாறு அணை பூங்காவை சீரமைக்க நடவடிக்கை இசக்கிசுப்பையா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,MLA ,Isakshi Subbaiah ,Manimuthar Dam Park ,Vikepuram ,Water Resources Minister ,Duraimurugan ,Manimuthar Dam ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா